Posts

Showing posts from September, 2012

Bharathiyin Ninnai Saranadainthen Kannamma lyrics

Image
பாரதியின்  நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா    பாடல் வரிகள்  ( இசைஞானி யின்   குரலில் ) நின்னை சரணடைந்தேன் , கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் பொன்னை , உயர்வை , புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென்று நின்னை சரணடைந்தேன் , கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன , கொன்று அவை போக்கென்று தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் நின்னை சரணடைந்தேன் , கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் துன்பம் இனி இல்லை , சோர்வில்லை சோர்வில்லை , தோற்பில்லை நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம் அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட நல்லது நாட்டுக ! தீமையை ஓட்டுக நின்னை சரணடைந்தேன் , கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் பொன்னை , உயர்வை , புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென்று